100% இயற்கை நாட்டு சர்க்கரை
இந்தியாவில் நாட்டுச் சர்க்கரை, 2500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.
நாட்டு சர்க்கரையில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் வெள்ளை சர்க்கரையை விட அதிக சத்தானது. வளரும் குழந்தைகளுக்கு நாட்டுச் சர்க்கரை உணவில் கலந்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெள்ளைச் சர்க்கரையின் ஜிஐ அதாவது, கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycemic index) 58 ல் இருந்து 84 வரைக்கும் இருக்கிறது. இது இன்சுலின் சுரப்பை பாதித்து ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகப்படுத்தும்.
நாட்டுச் சர்க்கரையின் ஜிஐ, 50 லிருந்து 54 வரை தான். இதனால் ரத்த்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகத்தான் அதிகரிக்கும். டீ, காபிக்கு மட்டுமல்லாமல், பழச்சாறுகள், கேக்குகள், அனைத்து வகையான இனிப்புகள் எல்லாவற்றுக்கும் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.
எங்கள் நாட்டுச் சர்க்கரை, ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால், இதன் நிறம் மாறாமல், இயற்கையான பழுப்பு நிறத்திலேயே இருக்கும்.
நாட்டு சர்க்கரை பயன்படுத்தி 29 வகை ஆர்கானிக் பொருட்கள்
ஆறு வகை நாட்டு சர்க்கரை
நாங்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக, நாட்டு சர்க்கரை பிரீமியம், நாட்டு சர்க்கரை கோல்ட், நாட்டு சர்க்கரை வெல்லம், தேங்காய் சர்க்கரை, நாட்டு தேன் சர்க்கரை மற்றும் நாட்டு பனங்கற்கண்டு சர்க்கரை போன்ற 6 வகை ஆர்கானிக் சர்க்கரைகளை உருவாக்கியுள்ளோம்.
இந்த வகை நாட்டு சர்க்கரைகளை நீங்கள் உங்களுடைய அனைத்து உணவு தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சர்க்கரைகள், உங்கள் ஆரோக்யத்தை பராமரிக்கும். நாட்டுச் சர்க்கரையின் ஜிஐ, 50 லிருந்து 54 வரை தான்.மேலும் விவரமறிய நாட்டுச்சர்க்கரை.ஷாப்
18 வகை நாட்டு சர்க்கரை தேநீர்
நாங்கள் 18 வகையான “நாட்டு சர்க்கரை தேநீர்” வகைகளை உருவாக்கி இருக்கிறோம். பெரும்பாலும், பாலுடன் நாட்டுச் சர்க்கரையை கொதிக்க வைத்து தேநீர் தயாரிப்பதில்லை. பால் திரிந்துவிடும் என்பதால், தனியாகத்தான் தேநீருடன் நாட்டுச் சர்க்கரையை சேர்ப்பார்கள். இதனால், சுவை குறைந்து இருக்கும். ஆனால், நாங்கள் 4 வருட ஆராய்ச்சிக்கு பிறகு, பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்தாலும் கெட்டுப் போகாத, ஆறு வகையான நாட்டு சர்க்கரைக்கரைகளை கொண்டு, பதினெட்டு தேநீர் வகைகளை உருவாக்கி, இந்த தேநீர் வகைகளை, பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க முடியும் என்பது மகிழ்ச்சிக்குரியது. மேலும் விவரமறிய ஆர்கானிக்டீமிக்ஸ்.காம்
நாட்டு சர்க்கரை டார்க் சாக்லேட்
70% டார்க் சாக்லேட்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. ஆனால், அதை தயாரிக்கும் நிறுவனங்கள், சாக்லேட்டின் இனிப்புக்காக வெள்ளை சர்க்கரையை சேர்க்கின்றன. இதனால், டார்க் சாக்லேட்டுகளின் பயன்கள் முழுமையாக கிடைப்பதில்லை. இதை மாற்றி, வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக, நாம் தான் முதன் முதலில் வெல்லம், கருப்பட்டி, தேஙகாய் சர்க்கரை, தேன் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகிய இயற்கை இனிப்புகளை சேர்த்து டார்க் சாக்லேட்டுகளை உருவாக்கி இருக்கிறோம். எங்களுடைய இயற்கை இனிப்புகள் மூலம் செய்த ஐந்து வகை சாக்லேட்களை வாங்கி சாப்பிட்டு பாருங்கள். மேலும் விவரமறிய தேசிசாக்கோ.காம்